Sunday, 29 June 2014

பாட்டி வைத்தியம்- நெஞ்சு சளி,தலைவலி,தொண்டை கரகரப்பு,தொடர் விக்கல்,வாய் நாற்றம்,தீப்புண்,மூக்கடைப்பு,வரட்டு இருமல்



நெஞ்சு சளிக்கு 


  தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து     நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலிக்கு 



  ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு   அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு



  சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து         தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்



  நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர்       விக்கல் தீரும்.
வாய் நாற்றம் 



  சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு     மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு



  கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்       கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
மூலம்



  கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன்             சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண் 



  வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில்           கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில்           குணமாகும்.

மூக்கடைப்பு



  ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்         காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு   விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல் 



  எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்




No comments:

Post a Comment